தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவில் கூட்டநெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: ஆர்சிபி அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கூட்டநெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். இந்த கொண்டாட்டத்தை ஆர் சி பி தங்களது ரசிகர்களுடன் சொந்த ஊரில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த ஆசைதான் தற்போது மிகப்பெரிய துயரத்தை அந்த அணி வீரர்களுக்கு கொடுத்திருக்கிறது. வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 தமிழர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
Advertisement

மேலும் வெளியே ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், மைதானத்திற்குள் ஆர்.சி.பி அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தல 10 லட்சம் வழங்க ஆர்.சி.பி. அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்ட ஆர்.சி.பி. அணி; பெங்களூரில் நேற்று நடைபெற்ற துரதிர்ஷ்ட சம்பவம் எங்களுக்கு மிகப்பெரிய வலியையும் கவலையையும் கொடுத்திருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும் 11 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முடிவெடுத்து இருக்கிறோம்.

Advertisement