வரும் 24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
10:07 AM Jul 18, 2025 IST
Share
Advertisement
டெல்லி : வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.