பெல் நிறுவனத்தில் 515 ஆர்ட்டிசன்கள்
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:
i) மிஷினிஸ்ட்: 104 இடங்கள்
ii) பிட்டர்- 176 இடங்கள்.
iii) வெல்டர்-97 இடங்கள்.
iv) எலக்ட்ரீசியன்- 65 இடங்கள்
v) டர்னர்-51 இடங்கள்
vi) எலக்ட்ரானிக் மெக்கானிக்-18 இடங்கள்
vii) பவுண்டரிமேன்- 4 இடங்கள்.
இடஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது: 27க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.29,500- 65,000.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு தேர்வு மற்றும் புராசசிங் கட்டணம் ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.400 மட்டும் செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.careers.bhel.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2025.