தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெல்ஜியத்தில் மர்ம ட்ரோன்கள் அட்டகாசம்: தலைநகரில் விமான நிலையம் திடீர் மூடல்

பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் அருகே மர்ம ட்ரோன்கள் பறந்ததால், விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெல்ஜியம் நாட்டில் சமீப காலமாக முக்கிய இடங்களில் மர்ம ட்ரோன்கள் பறப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வார இறுதியில் கிளெய்ன்-புரோகல் ராணுவ விமானப்படை தளம் அருகே ட்ரோன்கள் காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த நிலையில், தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய வான்பரப்பில் நேற்று (நவ. 4) இரவு 8 மணியளவில் மர்ம ட்ரோன்கள் பறப்பதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சேவை தொடங்கிய நிலையில், மீண்டும் ட்ரோன்கள் தென்பட்டதால் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது. இந்த ட்ரோன் அச்சுறுத்தல் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்துடன் நிற்கவில்லை.

பெல்ஜியத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான சார்லராய் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீஜ் விமான நிலையங்களிலும் ட்ரோன்கள் தென்பட்டதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பல விமானங்கள் மாஸ்ட்ரிக்ட், ஐந்தோவன், ஓஸ்டென்ட் போன்ற அருகிலுள்ள பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த தொடர் ட்ரோன் சம்பவங்கள் குறித்து பெல்ஜிய ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News