தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த மாதம் கிலோ ரூ.8... இந்த மாதம் ரூ.18; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருமடங்கானது பீட்ரூட் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

 

Advertisement

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.8க்கு விற்ற பீட்ரூட் இந்த மாதம் ரூ.18க்கு விலை போவதாக, சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டையில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. ஓணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் ரூ.பல கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடைபெறும்.

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெரியப்பூர், வடகாடு, வண்டிப்பாதை, பெத்தேல்புரம், அத்திக்கோம்பை, ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, பெரியகோட்டை, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, 16-புதூர், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கொத்தயம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் பயிரிட்டுள்ளனர். இவைகள் வளர்ந்து தற்போது அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.

அறுவடை செய்யும் பீட்ரூட்டை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் இதே நாளில் ரூ.8க்கு கொள்முதல் செய்யப்பட்ட பீட்ரூட் தற்போது ரூ.18க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், பீட்ரூட் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News