பி.எட் மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்: அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
Advertisement
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25ம் தேதிக்குள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். ஜூலை 28ல் இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் ஐடி மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து ஜூலை 4ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரவேண்டும். ஆகஸ்டு 6ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கானவகுப்புகள் தொடங்கும். இதில் உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர்சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.
Advertisement