5 ஆண்டுகளில் பிசிசிஐ வருவாய் ரூ.14627 கோடி
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஆண்டு மட்டும், ரூ. 4,193 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பிசிசிஐயின் தற்போதைய வங்கி இருப்பு, ரூ. 20,686 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சேர வேண்டிய தொகை அனைத்தும் கொடுக்கப்பட்ட பின் இந்த தொகை மீதம் உள்ளது என, 2024, ஆண்டு பொது கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Advertisement
Advertisement