தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கப்படலாம் என வெளியான தகவலுக்கு மறுப்பு..!!

மும்பை: பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய தலைவராக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

Advertisement

இந்​நிலை​யில் 52 வயதான சச்​சின் டெண்​டுல்​கரை நிர்​வகிக்​கும் அவருடைய எஸ்​ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் தலை​வர் பதவிக்கு சச்​சின் டெண்​டுல்​கரின் பெயர் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​களும், வதந்​தி​களும் பரவி வரு​வ​தாக எங்​கள் கவனத்​துக்கு வந்​துள்​ளது. அத்​தகைய முன்​னேற்​றம் எது​வும் ஏற்​பட​வில்லை என்​பதை நாங்​கள் திட்​ட​வட்​ட​மாகக் கூற விரும்​பு​கிறோம். ஆதா​ரமற்ற ஊகங்​களுக்கு நம்​பகத்​தன்மை அளிப்​ப​தை தவிர்க்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அனை​வரை​யும் கேட்​டுக்​கொள்​கிறோம்" என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Advertisement