தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் முன்கூட்டியே உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.23ம் தேதிக்கு பிறகு உருவாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது 21ம் தேதியே உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு கணித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement