தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக் கடலில் காற்றழுத்தம்: தமிழகத்தில் 4 நாள் கனமழை

Advertisement

சென்னை: வங்கக் கடலில் நீடித்து வரும் காற்றழுத்தம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் தமிழகத்தில் 25ம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் புதிய காற்று சுழற்சி நீடித்துக் கொண்டு இருக்கிறது.

தற்போது திசை மாறத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல் பகுதியில் இருந்து தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்க உள்ளது. குறிப்பாக 25ம் தேதி முதல் இந்த காற்று கிழக்கு நோக்கி வீசத் தொடங்கும். இதனால் நான்கு நாட்கள் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வெயில் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலன மழை இன்று தீவிரமாக பெய்யும் வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்கி உள் மாவட்டங்களில் மழை பெய்யும். டெல்டாவிலும் மழை பெய்யும். முன்னிரவில் தொடங்கி நள்ளிரவுக்குள் வட கடலோரப் பகுதியில் மழை பெய்யும். நாளை காற்று குளிர்ந்து இரு காற்று இணைந்து மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

25ம் தேதி வங்கக் கடலோரம் காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிடும். 25, 26, 27, 28ம் தேதிகளில் மட்டும் தமிழகத்தில் மழை நீடிக்கும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும். அதாவது 150மிமீ முதல் 200 மிமீ வரை அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறையில் 100 மிமீ வரை இருக்கும். வெப்ப சலன இடி மழை மாலையில் பெய்யும். பொள்ளாச்சி நெகமம் பகுதியில் பெய்யும். கிழக்குப் பகுதியில் வட உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். 29ம் தேதி மழை குறைந்து ஜூலை 5ம் தேதி வரை லேசாக பெய்யும்.

Advertisement

Related News