வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது
08:13 PM May 25, 2024 IST
Share
டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்க கடற்கரையில் சாகர்தீவு அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 120 கி.மீ. வரையும், இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.