வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!!
டெல்லி: வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் மியான்மர் வங்கதேச கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 16% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 201.9 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 234.5 மிமீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 9% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 325.4 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 354.9 மி.மீ. மழை பொழிந்துள்ளது.
Advertisement
Advertisement