தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2வது டெஸ்டிலும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்; தென் ஆப்ரிக்கா 314 ரன் முன்னிலை

கவுகாத்தி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 201 ரன்னுக்குள் சுருண்டதால் தோல்வியை தவிர்க்க போராடும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில், கடந்த 22ம் தேதி துவங்கியது.

Advertisement

முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா, தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தென் ஆப்ரிக்கா வீரர் செனுரன் முத்துசாமியின் அதிரடி சதத்தாலும், மார்கோ யான்சனில் அட்டகாச ஆட்டத்தாலும் 489 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 3ம் நாளான நேற்று இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த இணை 65 ரன்கள் எடுத்திருந்தபோது, 22 ரன்னில் ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பின், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 58 ரன்னில் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்த சாய் சுதர்சன் (15 ரன்), துருவ் ஜுரெல் (0 ரன்), கேப்டன் ரிஷப் பண்ட் (7 ரன்), நிதிஷ் குமார் ரெட்டி (10 ரன்), ரவீந்திர ஜடேஜா (6 ரன்) என சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து நடையை கட்டினர். 8வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்து ஆடிய வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் சற்று தாக்குப்பிடித்து 72 ரன்கள் எடுத்தனர். அதன் பின் மீண்டும் விக்கெட்டுகள் சரிந்ததால், 83.5 ஓவரில் இந்தியா 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ யான்சன், துல்லியமாக பந்து வீசி 48 ரன்கள் மட்டுமே தந்து 6 விக்கெட்டுகளை பறித்தார்.

சைமன் ஹார்மர் 3, கேஷவ் மஹராஜ் 1 விக்கெட் எடுத்தனர். அதன் பின் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 8 ஒவரில், விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்திருந்தது. ரையான் ரிக்கெல்டன் 13, அய்டன் மார்க்ரம் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தென் ஆப்ரிக்கா 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாளில் 2வது இன்னிங்சை தொடர்கிறது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ளதால் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட வேண்டிய நிலையில் உள்ளது.

* தென் கொரியாவை தெறிக்க விட்ட இந்தியா

இபோ: மலேசியாவின் இபோ நகரில் சுல்தான் அஸ்லம் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் போட்டியில் தென் கொரியா அணியுடன் இந்தியா மோதியது. இப்போட்டியில் அற்புதமாக ஆடிய இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் கொரியாவை வெற்றி வாகை சூடியது. ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் இத்தொடரின் அடுத்த போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. சுல்தான் அஸ்லம் ஷா தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடும்.

* துப்பாக்கி சுடுதலில் பிரஞ்சலிக்கு தங்கம்

டோக்கியோ: காது கேளாதோருக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பிரஞ்சலி பிரஷாந்த் துமல் பங்கேற்றார். போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அவர், அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டிகளில் அவர் வெல்லும் 3வது பதக்கம் இது. முன்னதாக நடந்த கலப்பு பிரிவு போட்டியில் இந்திய வீரர் அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து பிரஞ்சலி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News