கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் 7 நாட்களுக்கு குளிக்க தடை..!!
02:41 PM Aug 11, 2025 IST
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் 7 நாட்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. மலைமீதிருந்து பெரிய அளவில் கற்கள் உருண்டு வர வாய்ப்புள்ளதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.