வளைகோல்பந்து, ஹாக்கி போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
தண்டராம்பட்டு : வளைகோல்பந்து, ஹாக்கி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான வளைகோல்பந்து, ஹாக்கிபோட்டியில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்து தொடர் சாதனை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Advertisement
மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் முகமது மைனுத்தின் உதவி தலைமை ஆசிரியர் கருணாகரன், மை விழி, ஞானவேல் உடற்கல்வி ஆசிரியர் கோவிந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர், துணைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் வீரப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிர்மலா, உறுப்பினர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை நேற்று பள்ளியில் பாராட்டினர்.
Advertisement