ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல: கர்நாடக ஐகோர்ட் கருத்து
கர்நாடகா: ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல என கர்நாடக ஐகோர்ட் விளக்கம் அளித்துள்ளது. இஸ்லாமியரான பானு முஷ்டாக் இந்து விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றக்கூடாது என மனுதாக்கல் செய்யப்பட்டது. 2022ல் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக், வழக்கறிஞர் மட்டுமல்ல சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.பானு முஷ்டாக்கை மைசூரு தசரா விழாவுக்கு தலைமை விருந்தினராக அழைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தசரா விழாவில் பானு முஷ்டாக் பங்கேற்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் அல்ல என தீர்ப்பளித்தது. பல பொறுப்புகளில் இருந்தவர் பானு முஷ்டாக், தசரா விழாவில் பங்கேற்க தகுதியானவர்தான் என தெரிவித்ததுடன் மனுதாரர்களின் வாதங்களை நிராகரித்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
Advertisement
Advertisement