தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Advertisement

டெல்லி: மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கின.

இதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. விவாதத்தின் மீது மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது என்ன நடந்தது என்பது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார்.

இந்திய படைகளின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். பஹல்காமில் பாக். ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்றனர். துல்லியமான தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆப்ரேஷன் சிந்தூர் தீவிரவாதத்துக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கை. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் 100 தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியர்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகளுக்கு பிரதமர் மோடி சுதந்திரம் கொடுத்தார். பாக். பொய் பிரச்சாரம் செய்தது; கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாக். மரியாதை செலுத்தியது. சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் வலிமையை பறைச்சாற்றியது

இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தோம். பாக். மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை எஸ்-400 ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்தோம். இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு உடனடியாக பதிலடியை கொடுத்தது

இந்திய ஏவுகணைகளை பயன்படுத்தி 22 நிமிடங்களில் பாக். நிலைகள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. தீவிரவாதிகள் முகாம் தாக்கப்பட்டவுடன் சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்கியது. சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்கியதால், இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்திய ராணுவ தளவாடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பாகிஸ்தானால் இந்தியாவின் எந்த ஒரு இடத்தையும் தகர்க்க முடியவில்லை. பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களை, இந்திய ராணுவம் தாக்கி சேதப்படுத்தியது. பாக். தாக்குதல் நடத்தினால் எந்த நேரத்திலும் பதிலடி தர தயார்.

பாகிஸ்தானில் தீவிரவாத இடங்கள் மட்டுமே எங்கள் இலக்காக இருந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இலக்கு எட்டப்பட்டது. பாக். மீதான தாக்குதலை எந்த அழுத்தத்தாலும் நிறுத்தவில்லை: நான் பொய் சொல்லவில்லை. நோக்கம் நிறைவேறியதால்தான் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தினோம்.

மே 10ல் பாக். விமானப்படைத் தளத்தை இந்தியா தாக்கியதை அடுத்து பாக். தோல்வியை ஒப்புக் கொண்டது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பலத்தை உலகம் உணர்ந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதலை நடத்தியுள்ளோம். போர் நிறுத்தத்துக்கு பாக். ராணுவ அதிகாரிகளை முதலில் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. எந்த சந்தேகமும் வேண்டாம்; இந்தியாவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. 100 தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியர்கள் தாக்கி அழிக்கப்பட்டனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டியுள்ளது

வீரர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து தாக்குதல் நடவடிக்கை வியூகம் வகுக்கப்பட்டது. பாக். மீண்டும் அத்துமீறினால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும். இந்தியா அமைதியையே விரும்புகிறது. அத்துமீறலை அல்ல என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Advertisement