சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!
சென்னை: நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக.14ம்...
உத்தரகாசியில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்; 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்
உத்தராகண்ட்: உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உத்தரகாசியில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் கரையோர கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஹரித்துவாரில் மேகவெடிப்பு காரணமாக 30 செ.மீ. மழை கொட்டியதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கீர் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு...
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.8.2025) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி. அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலையுரம், நாராயணசாமி தோட்டத்தில் உள்ள சென்னை...
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை : ஐகோர்ட் கிளை பாராட்டு!!
மதுரை : நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. நெல்லை கேடிசி நகர் பகுதியில் கடந்த 27ம் தேதி காதல் விவகாரத்தில் கவின் என்ற பட்டியலின இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...
கொளத்தூர் பயணத்தால் நெடுநாள் பிரிந்திருந்த உணர்வை நீங்கி, புது வலிமையைப் பெற்றேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!
சென்னை: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியதாவது; உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று! இன்றைய கொளத்தூர் பயணத்தில்,...
ரூ.28 கோடியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம், பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம், பெரம்பூர்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை... ஈரான், ரஷ்யா எண்ணெய் இறக்குமதி தொடரும் : சீனா அதிரடி
பெய்ஜிங் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை என்று அறிவித்துள்ள சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை தொடர்கிறது. இதனால் அமெரிக்க, சீன வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரி விதிப்புகளை அறிவித்தார். சீனா மீது 34%...
நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், இனி விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை
டெல்லி : நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், இனி விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு மாத...
இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் 11ம் தேதி திறக்கிறது டெஸ்லா நிறுவனம்..!!
டெல்லி: மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் முதல் ஷோரூம் திறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் 11ம் தேதி திறக்கிறது. உலகெங்கும் மின்சார வாகனத் துறையில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் டெஸ்லா முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) திறந்தது. டெஸ்லா மாடல் Y சமீபத்தில் இந்திய...