தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வரிடன் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் ராஜேந்திரன்..!!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வரிடன் காண்பித்து அமைச்சர் ராஜேந்திரன் வாழ்த்து பெற்றார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் இராஜேந்திரன் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று. கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர். சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை. 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்த நிலையிலிருந்து மீண்டு வருகின்றன.

புதுடெல்லியில் செயல்பட்டுவரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம், ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தேர்வு செய்து, விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் 2023-24 அரவைப் பருவத்தில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒட்டுமொத்த செயல்திறனுக்கான முதல் பரிசிற்கான விருதும், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு

அபிவிருத்திக்கான இரண்டாம் பரிசிற்கான விருதும், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி மேலாண்மைக்கான இரண்டாம் பரிசிற்கான விருதும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி மேலாண்மைக்கான மூன்றாம் பரிசிற்கான விருதும், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தொழில்நுட்ப செயல்பாடுக்கான மூன்றாம் பரிசிற்கான விருதும், என ஐந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விருதுகள் மற்றும் சான்றுகள் பெற்று சாதனை படைத்துள்ளது. முதலமைச்சரிடம் இவ்விருதுகளை சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் இராஜேந்திரன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மேலும், அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017-18 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் பங்குத் தொகைக்கு வழங்க வேண்டிய இலாப பங்கீட்டு ஈவுத்தொகையான 10.23 கோடி ரூபாயும் மற்றும் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை 2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் பங்குத் தொகைக்கு வழங்க வேண்டிய இலாப பங்கீட்டு ஈவுத்தொகையான 12.37 கோடி ரூபாயும், என மொத்தம் 22.60 கோடிரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் இராஜேந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தட்சிணாமூர்த்தி. இ.ஆ.ப.. சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related News