Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள் : வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பரிந்துரை!
டெல்லி : வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில், ''வாட்ஸ் அப் பயன்பாடு அடிப்படை உரிமை அல்ல, உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள்'' என கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பெண் மருத்துவர் ராமன் குந்தரா என்பவர் தனது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு தனது அடிப்படை உரிமை மீறல் என்றும் இத்தகைய தடையை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அவர் தனது தனிப்பட்ட தகவல் தொடர்புக்கு வாட்ஸ் அப் அவசியம் என தனது வாதங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா தங்களது தீர்ப்பில், "இந்திய அரசியல் அமைப்பு கீழ், வாட்ஸ் அப் போன்ற தனியார் நிறுவனங்களை அணுகி சேவைகளுக்கு உரிமை கோர முடியாது. வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை எனவும் அதற்கு பதிலாக நமது உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள், " என்று பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 2021ம் ஆண்டு இந்திய நிறுவனமான சோஹோ வெளியிட்ட அரட்டை மெசேஜிங் செயலி தற்போது பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.