''நலம் காக்கும் ஸ்டாலின்'' மருத்துவ முகாமை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்கள் நடத்தப்படும். சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறும். முகாமில் இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவும் முகாமில் வழங்கப்படும்.
முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, யுஎஸ்ஜி அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்படும். பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.