ரஷ்யாவுடன் வா்த்தகம் செய்தால் 500% கூடுதல் வரி: டிரம்ப் எச்செரிக்கை
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 500% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றது. இப்போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே போரை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிளும் தோல்வியில் முடிந்தன. இதை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அதன்படி ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இருப்பினும் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 500% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை கொண்டுவரப்போவதாகவும், அதன்படி எந்த ஒரு நாடு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தாலும் அந்நாட்டு பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்