ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
இந்த விமானத்தில் சுமார் 50 பயணிகள், இதில் 5 குழந்தைகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து விலகிச் சென்றதாக உள்ளூர் அவசர அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் An-24 விமான பாகங்கள் கிடைத்துள்ளதால் மீட்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. An-24 விமானம் சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமகதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 240 பேர் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த துயர சம்பவம் மறைவதற்குள் மற்றொரு பயங்கரம் நடந்துள்ளது. பயணிகளுடன் வானில் பறந்த விமானம் ஒன்றும் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.