ஊரக பகுதிகளில் ரூ.500 கோடியில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!
Advertisement
சென்னை: ஊரக பகுதிகளில் ரூ.500 கோடியில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி 28 மாவட்டங்களில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. அரியலூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, திருப்பத்தூர்,
திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் ஆகிய 28 மாவட்டங்களில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளின்படி பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் இந்த 100 பாலங்கள் காட்டும் பணியினை தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை விரைவில் தொடங்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement