ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடல்
ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடப்பட்டது. சுனாமி தாக்கியதை அடுத்து ஹவாய் தீவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவாய் தீவை தொடர்ந்ட்ஹு அலாஸ்கா தீவிலும் சுனாமி தாக்கியுள்ளது. ரஷ்யாவில் நிலநடுக்கம், சுனாமியால் மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.