2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 3 விருதுகளை அள்ளிய ‘பார்க்கிங்’ திரைப்படம்!
Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்காக, 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படமாக, பாலையா நடித்த பகவந்த் கேசரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது பிரிவில் வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த மலையாள படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகையாக ஊர்வசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜவான் படத்திற்காக ஷாருக் கானும், 12th Fail படத்திற்கு விக்ராந்த் மாஸே ஆகியோர் பெறுகின்றனர். சாட்டர்ஜி vs நார்வே படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ராணி முகர்ஜி வென்றார்.
மேலும் சிறந்த ஒடியா திரைப்படமாக ’புஷ்கரா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மராத்தி திரைப்படமாக ’ஷாய்சி ஆய்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கன்னட திரைப்படமாக ’கண்டீலு’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஹிந்தி திரைப்படமாக, ‘கட்ஹல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.