தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் கல்வி நிதி ரூ.2,151 கோடி விடுவிக்க வேண்டும்

சென்னை: தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2,151 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும். கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
Advertisement

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ம் தேதி தலை சுற்றல் காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் இருந்தபோதே, தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். அப்போது கனிமொழி எம்பி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், ‘ஆஸ்பத்திரியில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மனு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது. அவர் இந்த மனுவை, கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

தமிழ்நாடு அரசால் 2018ம் ஆண்டு முதல் சமக்ரா சிக்ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கை 2020ன் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5 3 3 4 கட்டமைப்பில் பள்ளிக் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர். இந்த அளவிலான மற்றும் முக்கியத்துவமிக்க திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, லட்சக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது. 2024-25ம் நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி ஒன்றிய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்கவும், 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவித்திடவும் வேண்டும்.

 

Advertisement

Related News