தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

Advertisement

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில், இன்று 07.10.2024 தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணிகள் - 1379, முடிவுற்றப் பணிகள் - 802, முன்னேற்றத்தில் உள்ள பணிகள் - 577 அவைகளின் திட்டப் பணி வாரியாக ஆய்வு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், அறிவிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம், பாரம்பரிய நீர்வளத்துறை சின்னமாக விளங்கக்கூடிய அணைகள் திட்டங்களின் முன்னேற்ற விவரங்கள், நீர்வளத்துறையின் முன்னோடியான திட்டங்கள் குறித்த முன்னேற்றம், அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்,

மேலும், அமைச்சர் அவர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகள் தொய்வின்றி இந்த நிதியாண்டுக்குள் விரைந்து முடிக்குமாறும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பணிகளை வருகின்ற 31.12.2024-க்குள் முடிக்குமாறும் மேலும் அனைத்து மண்டலங்களில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை வருகின்ற 15.10.2024-க்குள் முழுமையாக முடிக்குமாறும் “முதல்வரின் முகவரி” மனுக்களை உடனடியாக தீர்வு செய்யுமாறும், திட்டப் பணிகளில் “நீங்கள் நலமா” பயனாளிகளிடம் பேசிய விவரங்களை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், சு.மலர்விழி, நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) சா.மன்மதன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளர் சு.ஸ்ரீதரன், மற்றும் அனைத்து மண்டல பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News