ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கணவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியும் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். அரக்கோணத்தைச் சேர்ந்த மூதாட்டி ராதா சிகிச்சை பலனின்றி காஷ்மீர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கெனவே கணவர் குப்பன் சீனிவாசன் (75) உயிரிழந்த நிலையில் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த 21ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பழைய பாதையில் இந்த நிலச்சரிவு நிகழ்ந்தது. பங்கங்காவுக்கு அருகில் உள்ள குல்ஷன் கா லங்கார் அருகே காலை 8.50 மணியளவில் கத்ரா நகரில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், ஒரு பக்தர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக, யாத்திரை நிறுத்தப்பட்டது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவுக்கான காரணம் கனமழை என்று கூறப்படுகிறது. வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, கோயில் நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். ஏற்கெனவே கணவர் குப்பன் சீனிவாசன் (75) உயிரிழந்த நிலையில் மனைவி ராதாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.