தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
இதனிடையே பணமோசடி வழக்கு தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியும் அனில் அம்பானி மோசடி நபர் என அறிவித்தது. எஸ்பிஐ வங்கி அறிவித்த அடுத்த நாளே, (ஜூலை 24 அன்று) அனில் அம்பானியின் 5 நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த சோதனைகளை நடத்தியது.
டெல்லி மற்றும் மும்பையில் 35 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அனில் அம்பானியை மோசடி நபர் என எஸ்.பி.ஐ. அறிவித்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.