தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வி.க.நகர் மண்டலத்தில் ரூ.46.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (01.08.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி. கே. சேகர்பாபு , வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் , வார்டு-69, முத்துகுமாரப்பா தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த சமுதாய நலக் கூடமானது, தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 40,300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 35 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள், 50 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், முதல் தளத்தில் 435 இருக்கைகளுடன் உணவு அருந்தும் இடம், இரண்டாம் தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண நிகழ்வு கூடம், மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான ஓய்வறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, சோமையா தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகளுடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணி, ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடப் பணி மற்றும் இப்பள்ளியில் எதிரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணி, மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.8.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டடப் பணி ஆகியவற்றினை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வார்டு-67, பேப்பர் மில்ஸ் சாலையில் ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வார்டு அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மேயர் ஆர். பிரியா, மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் மு. சரிதா மகேஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related News