காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூலை எழுதியுள்ள கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
இதுகுறித்து மேலும் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்!
வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!
தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற - உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த - பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக் “#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்” நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி!
ஆதிக்கமும் - சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.