முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கடந்தவாரம் வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவரது இல்லத்திற்க்கு சென்று சந்திப்பது, அதே போல உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரிப்பதும் தமிழ்நாட்டின் பண்பு. அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளுக்கு பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார்.
அதனை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தேன். அதனை தொடர்ந்து முதலமைச்சரின் மூத்த சகோதரர் மு.க.முத்து இறந்ததற்கு இரங்கல் தெரிவித்திருந்தேன். இதற்காகவே முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். தமிழ்நாட்டின் பண்பாடு இதன்மூலமாக வெளிப்படுகிறது. இதற்கு முன்னதாக எனது மனைவி மற்றும் தாயார் இறந்தபோது முதல்வர் நேரில் வந்து ஆறுதல் கூறியிருந்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.
மேலும் திமுகவின் B-டீம் என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், திமுகவில் இணையபோவதாகவும் வரும் செய்திகளில் எள் அளவும் உண்மையில்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுப்பேன். நான் தமிழ்நாட்டின் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் தான் முதல்வரை சந்தித்தேன். இதில் துளியளவும் அரசியல் இல்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடியவர்களை பார்க்கும்போது அண்ணாவின் பொன்மொழியான பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் சமரசிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க கோரி நான் போதுதான் கூறுவது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே 2024-ம் ஆண்டு 29-ம் தேதி 8வது மாதம் ஒன்றிய அரசுக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டிருந்தேன். 2025-ம் ஆண்டு 6-வது மாதம் 25-ம் தேதி இந்து முன்னணியினருக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டதையும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.