சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, சிங்கார சென்னை அட்டையை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!!
அதே போல் க்யூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. cmrl பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பான ரூ.50க்கும் குறையும் போது, cmrl மெட்ரோ பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்கு பதிலாக, பயணிகள் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.