அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததால் தான் போர் முடிவுக்கு வந்தது : 26வது முறையாக அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
Advertisement
இந்த நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டு பிரதமர் கெயர் ஸ்டார்மரை ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரி ரிசார்ட்டில் சந்தித்து பேசினார். கம்போடியா - தாய்லாந்து இடையேயான போரை நிறுத்தியதை குறிப்பிட்டு பேசிய அவர், தாம் மட்டும் இல்லை என்றால் 6 பிரதான போர்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் என்று கூறினார். இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை தான் பெரிய மோதல் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ஏனென்றால் இரு நாடுகளும் அணுசக்தி பலம் படைத்தவை என்று தெரிவித்தார். எனவே இரு நாடுகளின் தலைவர்களிடமும் போரை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகத்தை தொடர முடியாது என்று தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். போரை நிறுத்துவதற்கு கொஞ்சம் சுயநலமாக செயல்பட வேண்டி உள்ளதாகவும் இவ்வாறு பல போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
Advertisement