ரூ.12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த வங்கிகள்
Advertisement
டெல்லி: பொதுத்துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. 2015-16 முதல் 2024-25 வரை ரூ.12 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.5.82 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 5 ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1.14 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.பி.ஐ.க்கு அடுத்தபடியாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.85540 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 5 ஆண்டில் ரூ.81243 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
Advertisement