தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கத்​தில் பங்​கேற்று வங்கிகளில் உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்டெடுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கத்​தில் பங்​கேற்று உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்​டு ​கொள்ள வேண்​டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பங்​கு சந்​தை, பரஸ்பர நிதி நிறு​வனங்​களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்​வேறு காரணங்​களால் பொது​மக்​களால் நீண்ட கால​மாக உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது. இந்​த தொகையை உரிய​வர்​களிடம் ஒப்​படைப்​ப​தற்​காக ‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கம்’ கடந்த அக்​டோபரில் தொடங்​கப்​பட்​டது. இதுகுறித்து லிங்க்​டு இன் சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்ட பதி​வில், ”நாடு முழு​வதும் உள்ள வங்​கிகளில் ரூ.78 ஆயிரம் கோடி​யும், காப்​பீட்டு நிறு​வனங்​களில் ரூ.14 ஆயிரம் கோடி​யும், பரஸ்பர நிதி நிறு​வனங்​களில் ரூ.3 ஆயிரம் கோடி​யும், பங்கு ஈவுத் தொகை​யாக ரூ.9,000 கோடி​யும் உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளன.

Advertisement

கடின​மாக உழைத்து சம்​பா​தித்து சேமித்த இந்த தொகையை ஒவ்​வொரு குடிமக​னும் மீண்​டும் பெற முடி​யும் என்​பதை உறு​திப்​படுத்​தவே ‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கம்’ தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த செயல் ​முறையை எளிமை​யாக​வும் வெளிப்​படை​யாக​வும் மாற்ற இந்​திய ரிசர்வ் வங்​கி, இந்​திய காப்​பீட்டு ஒழுங்​கு​ முறை மற்​றும் மேம்​பாட்டு ஆணை​யம் (ஐஆர்​டிஏஐ), இந்​திய பங்கு பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) மற்​றும் மத்​திய பெரு நிறுவன விவ​கார அமைச்​சகத்​தால் தனித்​தனி இணை​யதளங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. மேலும், உரிமை கோராத தொகையை மீட்​ப​தற்​காக, நாடு முழு​வதும் தொலை​தூர கிராமங்​கள் உட்பட 477 மாவட்​டங்​களில் ஏற்​கனவே முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, பொது​மக்​கள் தங்​கள் பெயரிலோ அல்​லது தங்​கள் குடும்​பத்​தினர் பெயரிலோ உரிமை கோரப்​ப​டாத தொகை ஏதேனும் இருக்​கிறதா என சரி​பார்த்​து, உரிமை கோரப்​ப​டாத முதலீடு இருந்தால் அதை மீட்​டு கொள்ள வேண்​டும்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

Advertisement

Related News