இந்திய வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்க அனுமதிப்பது முட்டாள்தனம்: காங்கிரஸ் கண்டனம்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு வங்கிகள் படிப்படியாக இந்திய வங்கிகளை வாங்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த முட்டாள்தனமான நடவடிக்கைகள் பெரும் அபாயங்களை ஏற்படுத்துகின்றன. முதலாவதாக லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் குழுமமும், கத்தோலிக்க சிரியன் வங்கியை கனடாவின் பேர்பாக்சும் கையகப்படுத்தின.
Advertisement
மூன்றாவதாக ஜப்பானின் சுமிடோமோ மிட்சுய் வங்கி, யெஸ் வங்கியையும் தற்போது துபாயின் எமிரேட்ஸ் என்பிடி ஆர்பிஎல் வங்கியையும் கையகப்படுத்துகிறது. கடந்த 1969ல் இந்திராகாந்தி வெளிநாட்டு வங்கிகளை தேசியமயமாக்காததற்காக ஜனசங்கம் அப்போது விமர்சித்ததை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Advertisement