தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.58,331 கோடி டெபாசிட் தொகை, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றம்!!

மும்பை : 12 பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.58,331 கோடி டெபாசிட் தொகை, முதலீட்டாளர் கல்வி மற்​றும் விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பத்​து                  ஆண்​டு​களுக்​கும் மேலாக செயல்​ப​டா​மல் இருக்​கும் நடப்பு மற்​றும் சேமிப்பு கணக்​கு​களில் உள்ள இருப்பு தொகை முதலீட்டாளர் கல்வி மற்​றும் விழிப்புணர்வு (டிஇஏ)  நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதிர்வடைந்த பிறகு பத்தாண்டுகள் வரை யாரும் உரிமை கோராத டெபாசிட்டுகளும் இந்த நிதியத்துக்கு மாற்றப்படுகின்றன. அந்த வகை​யில் ஜூன் 30, 2025 நிலவரப்​படி, எஸ்​பிஐ வங்​கி​யில் யாரும் உரிமை     கோ​ராத ரூ19,330 கோடி டிஇஏ-க்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

Advertisement

இதையடுத்து பஞ்​சாப் நேஷனல் வங்கி ரூ.6,911 கோடி, கனரா வங்கி ரூ.6,278 கோடி, பரோடா வங்கி ரூ.5,277 கோடி, யூனியன் வங்கி ரூ.5,105 கோடி தொகை டிஇஏ-நி​திய கணக்​குக்கு மாற்றப்பட்​டுள்​ளது. இவை த​விர, பேங்க் ஆப்  இந்​தியா (ரூ.3,934 கோடி), இந்​தி​யன் வங்கி (ரூ.3,740 கோடி), ஐஓபி (ரூ.2,386 கோடி), சென்ட்​ரல் பேங்க் ஆப் இந்​தியா (ரூ.2,092 கோடி), யூகோ வங்கி (ரூ.1,312 கோடி) ஆகிய வங்​கி​களில்​இருந்​தும் உரிமை கோரப்​ப​டாத தொகை டிஇஏ-க்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. ஒட்​டுமொத்த அளவில் 12 பொதுத் துறை வங்​கி​களில் இருந்த ரூ.58,331 கோடி டெபாசிட்​டு​கள் டிஇஏ-க்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

Advertisement

Related News