பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை
Advertisement
வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. 2009 நகர உத்தரவின் கீழ் கட்டாயமான முறையான அனுமதியைப் பெறவில்லை.ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு மூன்று லட்சம் பேர் குவிந்தனர். மேலும் அன்றைய தினம் மாலை 3:14 மணிக்கு போடப்பட்ட பதிவில் மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு போடப்பட்ட எந்த பதிவிலும் இது குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்.சி.பி. நிர்வாகமே காரணம்"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement