66 வங்கதேச மக்கள் நாடு கடத்தல்: டெல்லி காவல்துறை அதிரடி
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் இணைந்து டெல்லி காவல்துறை அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தற்போது, அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை இறுதி செய்து வருவதாகவும், அனைத்து சட்ட விதிமுறைகளும் முடிந்தவுடன் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.