வங்கதேச மகளிர் அணி டிசம்பரில் இந்தியா வருகை
புதுடெல்லி: வங்தேச மகளிர் கிரிக்கெட் அணி, வரும் டிசம்பர் மாத மத்தியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அந்த அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரிய (பிசிபி) நிர்வாகி ஒருவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த போட்டிகள், கொல்கத்தா, கட்டாக் நகரில் நடைபெறவுள்ளன. ஐசிசி மகளிர் ஒரு நாள் சாம்பியன்ஷிப் புதிய தொடரின் துவக்கமாக, இந்தியா - வங்கதேச மகளிர் இடையிலான ஒரு நாள் போட்டிகள் அமைந்துள்ளன.
Advertisement
Advertisement