வங்கதேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது 'ரெமல்' புயல்
08:17 AM May 26, 2024 IST
Share
கொல்கத்தா: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'ரெமல்' புயல் தீவிரப் புயலாக இன்று வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே இன்று நள்ளிரவு புயல் கரையைக் கடக்கும் எனவும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.