வங்கதேசத்தை மீண்டும் வீழ்த்திய அமெரிக்கா: 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தல்
Advertisement
பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் சவுமியா சர்க்கார் டக்அவுட் ஆக தன்சித் ஹசன் 19, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36, ஷாகிப் அல்ஹசன் 30, டவ்ஹிட் ஹ்ரிடோய் 25 ரன் எடுத்தனர். 19.3 ஓவரில் 138 ரன்னுக்கு வங்கதேசம் ஆல்அவுட் ஆனது. இதனால் அமெரிக்கா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் 2-0 என தொடரையும் கைப்பற்றியது. 3 விக்ெகட் எடுத்த அலிகான் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது. உலக கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் வங்கதேசம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement