வங்கதேச கலவரத்தில் இந்தியாவுக்கு தொடர்பா? ஒன்றிய அரசு மறுப்பு
புதுடெல்லி : வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மலை பகுதியில் பழங்குடியின பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் பழங்குடியினருக்கும் பெங்காலி குடியேற்றக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது குறித்து வங்கதேச அரசின் உள்துறை ஆலோசகர் ஜெகாங்கீர் ஆலம் சவுத்ரி கூறுகையில்,
Advertisement
இந்த மோதலில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், ஒன்றிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில்,‘‘வங்கதேசத்தின் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் ’’ என்றார்.
Advertisement