வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி
அபுதாபி: ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 48.5 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மெஹிடி ஹசன் மிராஸ் 60, டோஹித் ஹிரிடோய் 56 ரன் அடித்தனர். ஆப்கன் பவுலிங்கில் ரஷித்கான், அஸ்மதுல்லா உமர்சாய் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
மேலும் ஒருநாள் போட்டியில் 200 விக்கெட் எடுத்த முதல் ஆப்கன் பவுலர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்தார். பின்னர் 222 ரன் இலக்குடன் களம் இறங்கிய ஆப்கன் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா தலா 50, அஸ்மதுல்லா உமர்சாய் 40, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி நாட் அவுட்டாக 33 ரன் அடித்தனர். 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன் எடுத்த ஆப்கன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அஸ்மதுல்லா உமர்சாய் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி வரும் 11ம் தேதி நடக்கிறது.