வங்கதேசத்தில் பயங்கரம்: பள்ளி மீது விமான படை விமானம் விழுந்து மாணவர்கள் உட்பட 20 பேர் பலி
வங்கதேச தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரல் சாகீத் கமால்,‘‘ விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் 20 உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆசிரியர்கள். தீக்காயம் மற்றும் இதர காயங்கள் ஏற்பட்ட 170 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விமானத்தை இயக்கிய பைலட் முகமது தவ்கீர் இஸ்லாம் ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த விழுந்து நொறுங்கியதில் 260 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
சீனாவிடம் இருந்து வாங்கிய விமானம்
வங்கதேச விமானப்படை பயன்படுத்தி வரும் எப்-7 ரக போர் விமானங்கள் சீனாவில் இருந்து வாங்கப்பட்டவை. சீனாவின் செங்குடு ஜெ-7 என்ற போர் விமானத்தின் ஏற்றுமதி ரகம் தான் எப் 7. வங்க தேச விமானப்படையிடம் 36 எப்-7 ரக விமானங்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் தற்போது விழுந்து நொறுங்கி உள்ளது.