வாழைப்பழத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை: மனைவி வெளிநாடு வேலைக்கு சென்றதால் விபரீதம்
Advertisement
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து 3 பேர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ரமேஷ் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர் தானும் வாழைப்பழத்தில் விஷத்தை சாப்பிட்டு விட்டு தூக்கில் தொங்கியுள்ளார் என தெரியவந்தது.
Advertisement