சாதியின் பெயரில் கோயிலுக்குள் நுழைவதை தடுக்க துணிபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் : ஐகோர்ட் கிளை
கரூர்: கரூர் சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் வழிபாட்டில் பட்டியல் இனம் மக்களை அனுமதிக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு விசாரணையின் போதுதான் காவல்துறையினர் அமைதியை பாதுகாக்காமல் பாகுபாட்டை பாதுகாத்துள்ளனர். மக்களுக்கு இடையை பாகுபாட்டை ஏற்படுத்தும் வேலையை காவல்துறையினர் பாதுகாப்பாக செய்துள்ளனர். உரிமைகளை பாதுகாக்கவும் உரிமை மீறலை பாதுகாத்துள்ளனர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் வழிபாட்டிற்க்கு பட்டியல் இனம் மக்களை அனுமதிப்பது தொடர்பாக தொடரப்பட்டுள்ள குற்றவழக்கை விரைந்து விசாரித்து காவல்துறையினர் முடிக்க வேண்டும் என உயர்நிதிமன்ற மதுரை அமர்வானது உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது தான் அரசியல் அமைப்பு சட்டஉரிமைகளை தடுப்பவர்கள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் மீது ஏற்படுத்தும் சட்டவிதிமுறைகள் சந்திக்க நேரிடும் என நீதிபதி தனது கருத்தை தெரிவித்துருக்கிறார்.
வழக்கின் பின்னணி; கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் வழிபாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி வன்னியகுல சத்திரியர் நல அறகட்டளை தலைவர் முருகன் என்பவரும், மாரியம்மன் கோவில் வழிபாட்டில் பட்டியல் இன மக்களை அனுமதிக்க கோரியும் கோவிலை மூடுவது தொடர்பான கோட்டாசியர் உத்தரவை ரத்து செய்வதும் கோரியும் மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி; மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசனத்துக்காக திறந்துவைப்பது மூலம் இந்து மதம் தூய்மை படுத்தப்பட்டதாக காந்தி ஹரிஜனில் எழுதியிருக்கிறார். இந்த வழக்கின் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் படியில் சாதியினர் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டுருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவால் பட்டியில் சாதியினர் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டது. பெருமை கூறிய விசியம் அல்ல, அவுமானம் படக்கூடிய விசியம் ஆகும். மதுரையில் 1939-ம் ஆண்டு சமூகத்தலைவர்களின் துணிச்சலினால் அடைந்து. தற்போது நீதிமன்ற உத்தரவால் மட்டுமே நிறவேற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுருக்கிறது.
இதில் மாவட்டாட்சியார், காவல் துறை கண்காணிப்பாளர் எதற்காக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது என தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார். அப்பதவிகள் அலங்கார பதவிகள் அல்ல அரசியில் பதவிகள், அரசியில் அமைப்பு வழங்கியுள்ள அதிகாரம் சலுகைகளை அனுபவைக்கும் ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இரு சமூகங்களுக்கிடையே அமைதி கூட்டம் நடத்தி கோவிலுக்குள் நுழைய சாதி பாகுபாடு கடைபிடிப்பது அரசியில் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையுடன் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் கூட்டுவழிபாடு நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கோவில்கள் அனைத்து பக்தர்களுக்கும் திறந்து இருப்பதை உறுதி செய்யவும் கடமை. காவல் கண்காணிப்பாளருக்கும் இதில் கடமை இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்திருக்கிறார். அரசியல் அமைப்பு சட்ட உரிமைகளை தடுப்பவர்கள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் மற்றும் சாதியின் பேரில் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க துணிபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் நீதிபதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.