ரூ.25 லட்சத்துக்கு மேல் நிலுவை இருந்தால் உஷார் கடனை திரும்பிச் செலுத்தாதவர்களை வகைப்படுத்த புதிய நெறிமுறைகள்: வெளியிட்டது ரிசர்வ் வங்கி
கடன் தவணையை செலுத்தத் தவறிய கணக்குகள் வராக்கடனாக கருதப்படுகின்றன. இதில் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களாக வகைப்படுத்தப்பட வேண்டும். வங்கிகள் முதற்கட்ட ஆய்வில் வராக்கடன் என கண்டறிந்து மேற்கண்ட விதிகளுக்கு பொருந்தியிருந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட கடன்தாரரை ‘வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்த தவறியவர்கள்’ பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த வகையியும், நிதி நிறுவனமும் கடன் வழங்கப்படக் கூடாது. கடனை பைசல் செய்த பிறகும் இவர்களுக்கும், இவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் கூடுதல் கடன் வழங்குவதற்கான தடை ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இதன்மூலம், பிற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் இவர்களுக்கு கடன் வழங்குவது தடுக்கப்படுகிறது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.